பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்
கமுதி: கமுதி அருகே நாராயணபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஞானக்கனி தலைமை வகித்தார்.சமூக ஆர்வலர் சிவசுப்பிரமணி 80 மாணவர்களுக்கு கிரிக்கெட் பேட், கேரம் போர்டு உட்பட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். ஆசிரியர்கள் அந்தோணி ஆரோக்கிய பிரபாகர், ராஜேஸ்வரி, ராஜா, முகமது ஹபீப், நீர்ப்பாசன தலைவர் ராமச்சந்திரன், மாணவர்கள் பங்கேற்றனர்.