உள்ளூர் செய்திகள்

குட்டீஸை வரவேற்க பள்ளிகள் தயார்

திருப்பூர்: நாற்பத்தைந்து நாட்கள் கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. சட்டசபை தேர்தல் காரணமாக வழக்கத்தை விட முன்னதாகவே விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் மேலும் மூன்று நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு, இதோ இன்று பள்ளி மணிகள் ஒலிக்கத் தயாராகிவிட்டன.கடந்த ஒரு வாரம் முன்பிருந்தே திருப்பூர் மாவட்டப் பள்ளிகளில் வளாகத் துாய்மை, வகுப்பறைகளைப் பராமரித்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தல், மைதானம் மற்றும் கழிப்பிடங்களைச் சீரமைத்தல் போன்ற சுகாதாரப் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்பட்டன.நேற்று, பள்ளிகளின் நுழைவு வாயில்களும், இறைவணக்கக் கூட்டம் நடக்கும் திடல்களும் துாய்மை செய்யப்பட்டன. தேசியக்கொடிக் கம்பத்தில் கொடியைக் கட்டி ஏற்றி, இறக்கி வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என்பதால், அனைத்துப் புத்தகங்களும் நேற்று மாலைக்குள்ளாகவே தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.இனி சாதனைத் தேர்ச்சி பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், அதற்கு ஏற்ப மே 25ம் தேதியே அனைத்து வளாகங்களும் தயார் நிலைக்கு வந்துவிட்டன. உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, அதற்கேற்பப் பாடப்பிரிவுகளை உடனே வழங்க அறிவுறுத்தியுள்ளோம். தலைமை ஆசிரியர்களும், முக்கியப் பாட ஆசிரியர்களும் இப்போதிருந்தே மாணவ, மாணவிகளைக் காலாண்டுத் தேர்வுக்குத் தயார்படுத்த வேண்டும். இந்தக் கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டம் நிச்சயம் மிகச் சிறந்த தேர்ச்சி விகிதத்தை எட்டும்; அதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் இப்போதே துவங்கப்பட்டுவிட்டன. - புனிதா அந்தோணியம்மாள், முதன்மை கல்வி அலுவலர். 10ம் வகுப்பில் கவனம் இந்தக் கல்வியாண்டின் துவக்கத்திலிருந்தே பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கும், பாட ஆசிரியர்களுக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் வாயிலாக அறிவுரைகளை வழங்கியுள்ளோம். அதே போல், நடுநிலைப் பள்ளியிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்கு அடி எடுத்து வைக்கும் மாணவர்களின் கற்றல் திறனை ஆரம்பத்திலேயே பரிசோதித்து, அவர்களின் நிலைக்கு ஏற்பப் பாடங்களைக் கற்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. - காளிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) .பள்ளியில் சேருங்கள் முதன்முறையாகப் பள்ளிக்கு வரும் மழலைகளைப் பலுான்கள், சாக்லேட்டுகள் கொடுத்து அன்போடு இன்முகத்துடன் வரவேற்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி கலந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர் தங்களது பள்ளி வயதை எட்டிய குழந்தைகளைத் தாமதிக்காமல், உடனடியாகப் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் கல்விப் பயணத்தைத் துவக்கி வைக்க வேண்டும்- சித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்