உள்ளூர் செய்திகள்

சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் சுதாகர் குழு, செஞ்சி அடுத்த பெரும்ப்புகை கிராம கள ஆய்வில், அங்குள்ள குளத்தின் அருகே உள்ள பாறை மீது கல்வெட்டு இருந்ததை கண்டனர்.சுதாகர் கூறியதாவது: 11ம் நுாற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த கல்வெட்டு, மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் தலையை கொய்த குலோத்துங்க சோழனின் புகழைக் கூறுகிறது. குலோத்துங்க சோழனுக்காக, சம்புவராய முதலிகளில் கண்ணிறைந்த பெருமாள் அங்கராயனேன் என்பவர் குளம் வெட்டியதை பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்