கல்வி கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை மத்திய அரசு மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.உயர்கல்விக்கு கடனுதவி தேவைப்படும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் http://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது ஆதார் விபரம், கல்லுாரி சேர்க்கை சான்றிதழ், கல்வி கட்டணம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்கு விபரம், பெற்றோர் வருமான சான்றிதழ், பெற்றோர் ஆதார் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.