உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி

சிதம்பரம்: குமராட்சியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தொழில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்ததுஅரசு கலை கல்லுாரி வளாகத்தில், மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில், 'வகுப்பறையிலிருந்து தொழில் வாழ்க்கை வரை' என்ற தலைப்பில் சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லுாரி மாணவர், சந்தீப் குமார் பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்