உள்ளூர் செய்திகள்

பி.ஜி.வி., பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம் நடந்தது.பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். அத்த பூக்கோலம் இட்டு மாணவர்கள் ஓணத்தின் சிறப்பை நாடகமாக நடத்திக் காட்டினர். மாணவர்களின் திருவாதிரை களி, வல்லம் களி, சிங்காரி மேளம், ஆசிரியர்களின் ஓணம் நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நாகேஸ்வரி, ஜெனிபர், கீனா, சவுமியா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்