இளையோர் வானியல் அறிவியல் மாநாடு
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் மாண்டல அளவிலான இளையோர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு நடைபெற்றது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சொக்கநாதன் வரவேற்றார். சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். திருச்சி ராமன் ஆய்வு அறக்கட்டளை தலைவர் ரவிச்சந்திரன், கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரமோகன், இயற்பியல் துறை தலைவர் முருகேஸ்வரி, அழகப்பா அரசு கல்லுாரி பேராசிரியர் கருணாகரன் சிறப்புரை ஆற்றினர். வானியல், அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல், ஆராய்ச்சி மனப்பான்மை சம்பந்தமாக ஆய்வு கட்டுரைகள் சமர்பித்தனர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பேராசிரியர்கள் யுவலோஷினி, கவிதா தொகுத்து வழங்கினர். பேராசியர் சேல்ஸ் அமல்ராஜ் நன்றி கூறினார்.