உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கே.கே.நகர்: வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சென்னை மாவட்ட குழு சார்பில், நேற்று கே.கே.நகரில் போராட்டம் நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.இதில், காது கேளாதோர், வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனியாக 1 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; தற்போது மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை ஆறாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில், சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து, தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசனை சந்தித்து, தங்களது மனுவை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்