தொழில் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு
பொள்ளாச்சி: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் நடக்கும், ஜூலை 2027ல் நடக்கும் தொழில் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு நவ., 26ல் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டும் நவ., 27ல் செய்முறை தேர்வு நடைபெறும்.www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். செப்., 21 முதல் அக்., 9க்குள் விண்ணப்பிக்கலாம்.