உள்ளூர் செய்திகள்

தொழிற்கல்வி மாணவர்களுக்கு திறன் பயிற்சி

சூலுார்: சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அகப்பயிற்சி மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.சூலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி மாணவர்கள், 23 பேர், தொழிற்கல்வி ஆசிரியர்கள் கதிர்வேல், தங்கவேல் வழி காட்டுதலில், முத்துக்கவுண்டன் புதுாரில் 'சிரா' இன்ஜினியரிங் கம்பெனியில், அகப் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இயந்திரங்களின் செயல்பாடுகள், அளவீடு செய்தல், லேசர் கட்டிங், பவுடர் கோட்டிங் செய்யும் முறைகள், வெல்டிங் செய்யும் முறைகள் குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும், இயந்திரங்களை இயக்கும் முறை, தர அளவீடு, மூலப்பொருட்களை அறிதல், வடிவமைப்பு உட்பட நுணுக்கள் குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தினமும், எட்டு மணி நேரம் வீதம், 10 நாட்கள் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டன.ஆசிரியர்கள் கூறுகையில், 'கற்றல், கற்பித்தலோடு, மாணவர்கள் அகப்பயிற்சி மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படுவதால், மன உறுதியும், பாடங்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும் கிடைப்பதால், கற்றல் அறிவு மேம்படுகிறது. வேலை வாய்ப்பு கிடைக்கவும், தொழில் முனைவோராகவும் உயர இப்பயிற்சி பயனளிக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்