உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

வேடசந்துார்: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வேடசந்துார் வட்டார நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.தேர்தல் ஆணையாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் சூசை மாணிக்கம், பார்வையாளராக திண்டுக்கல் மாவட்ட தலைவர் கோபிநாதன் பங்கேற்றனர். புதிய வட்டார தலைவராக வெங்கடாஜலபதி, செயலாளராக காளீஸ்வரன், பொருளாளராக முத்துலட்சுமி, வட்டார மகளிர் அணி தலைவராக நளினி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொறுப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையாளர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்