உள்ளூர் செய்திகள்

காமன்வெல்த் மாணவர்களுக்கு பிரிட்டன் வாய்ப்பு

இவை காமன்வெல்த் உதவித்தொகை கமிஷன் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் உதவி கிடைக்கும். மேலும் முதுநிலை மற்றும் பிஎச்.டி. நிலையிலான முழுநேர படிப்பிற்கு காமன்வெல்த் உதவித்தொகை கமிஷன் ஆதரவளிக்கிறது. இதைத்தவிர வளரும் நாட்டு பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி. மேற்கொண்டிருக்கும் மாணவர்கள், தங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக, ஒரு வருடம் பிரிட்டன் சென்று திரும்பும் வாய்ப்பும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் காலியாக இருக்கும் இடங்களை விட, 3 மடங்கு அதிகமான விண்ணப்பங்களை இந்த கமிஷன் கோருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களெல்லாம் உதவித்தொகை பெறுவார்கள் என்ற உத்திரவாதம் இல்லை. இதைப் பற்றிய விரிவான தகவலுக்கு, http://www.cscuk.org.uk என்ற இணையதளத்தை பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்