உள்ளூர் செய்திகள்

இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்புகள்

இந்தியாவின் தொலைநிலைக் கல்வியில் முத்திரை பதித்து அன்றாடம் சரித்திரம் படைத்துவரும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (இக்னோ) 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தப் பல்கலைக்கழகம் இயங்கி வருவது தனிச்சிறப்பாகும். இக்னோவில் ரிசர்ச் மற்றும் டீச்சிங் அசிஸ்டன்ட் பிரிவில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டில்லியில் பணி புரியத்தக்க இந்தப் பதவிக்கு நேர்காணல் மூலம் தேர்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு - இக்னோவின் ரிசர்ச் அண்டு டீச்சிங் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயதில் 5 ஆண்டுகள் சலுகை உள்ளது. கல்வித் தகுதி - இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க முதுநிலை பட்டப்படிப்பு அல்லது எம்.பில்., படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறியவர்களுக்கு முன்னுரிமை உண்டு. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது. மொழி பெயர்ப்பு படிப்பு, மொழியியல், கலாச்சார படிப்புகள், லிங்விஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முறை - இக்னோ பல்கலைக்கழகத்தின் ரிசர்ச் அண்டு டீச்சிங் அசிஸ்டன்ட் பதவிக்கான விண்ணப்பங்களை இந்தக் கல்வி நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து டவுண்லோட் செய்து பெற வேண்டும். இதனை முழுமையாகப் பூர்த்திசெய்து பின்வரும் முகவரிக்கு வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய www.ignou.ac.in என்ற இணையதளத்தில் தேடவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்