உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளுக்கு இடைக்கால தடை

பி.ஜி.டி.எம். படிப்புகளை நடத்தும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிகளுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை வரவேற்றுள்ளன. ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதியில் மாணவர் சேர்க்கை மற்றும் கட்டணங்கள் தொடர்பாக மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருந்தன. இந்த இடைக்கால தடையின் மூலம் தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தங்களின் பி.ஜி.டி.எம். படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க கேட், மேட் மற்றும் சேட் உள்ளிட்ட பல தேர்வு மதிப்பெண்களை இந்த வருட சேர்க்கைக்கு பயன்படுத்தலாம். அநியாய கட்டணம் வசூலிப்பதாக தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களின் மீது 80000 புகார்கள் வந்துள்ளன என்று ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்தது. மேலும் சேர்க்கை மறுப்பு மற்றும் கொல்லைப்புற வழியாக சேர்க்கை ஆகியவைப் பற்றியும் குறைந்த அளவிலான புகார்களை ஏ.ஐ.சி.டி.இ. பெற்றது. மேலும் தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் தொடுத்த இந்த வழக்கானது அடுத்த 4 வாரங்களில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்