உள்ளூர் செய்திகள்

புதிய சேவையை துவக்கியது ஏ.ஐ.சி.டி.இ.

தனது செயல்பாட்டில் அதிக பொறுப்பையும், வெளிப்படை தன்மையையும் ஏற்படுத்த, ஏ.ஐ.சி.டி.இ., ஒரு புதிய வலை அடிப்படையிலான பயன்பாட்டை(வெப் பேஸ்டு அப்ளிகேஷன்) நிறுவியுள்ளது. இதில், கல்வி நிறுவனங்களால் நிரப்பப்படும் தரவுகள் மற்றும் தகவல்கள் இடம்பெறும். இந்த புதிய பயன்பாட்டை தொடங்கி வைத்து பேசிய மனிதவள அமைச்சர் கபில் சிபல், "இந்த புதிய அம்சத்தின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனத்தை கண்டறிய முடியும், அதே நேரத்தில் சுய வெளிப்படுத்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய முடியும்" என்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ.சி.டி.இ -இன் "வணிக மதிநுட்ப அறிக்கை"(பிசினஸ் இன்டலிஜென்ட் ரிபோர்ட்) என்ற வலை அடிப்படையிலான சேவையையும் துவக்கி வைத்தார். இதில் பாடங்கள், படிப்புகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பான தகவல்கள் இருக்கும். இதன்மூலம் பொது மக்கள் மற்றும் பல தரப்பாருக்கும் உபயோகமான தகவல்கள் கிடைக்கும். மேலும் பயன்பாடுகளின் நிலையை அவ்வப்போது தெரிவிக்க எஸ்.எம்.எஸ். சேவையையும் ஏ.ஐ.சி.டி.இ. துவக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்