உள்ளூர் செய்திகள்

மதுரை வழிகாட்டி நிகழ்ச்சி நிரல்

கடந்த 20 ஆண்டுகளாக பிளஸ் 2 மாணவர்களுக்காக, தினமலர் நடத்தி வரும் "வழிகாட்டி நிகழ்ச்சி" இன்று முதல் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் துவங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன் குத்துவிளக்கேற்ற கருத்தரங்கை துவக்கி வைக்கிறார். 10.25 மணிக்கு மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணை வேந்தர் முருகேசன் கண்காட்சியை திறந்து வைக்கிறார். இன்றைய கருத்தரங்கு அமர்வுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆகும் வழிகள் குறித்து மனிதநேய ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜராஜன், கடல்சார் படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் நரசய்யா, கைநிறைய சம்பாதிக்க உதவும் சி.ஏ/ஏ.சி.எஸ்.,/ ஐ.சி.டபிள்யூ குறித்து ஆடிட்டர் சேகர், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து சுந்தரபாண்டியன், வெற்றிக்கு வழிகாட்டும் தன்னம்பிக்கை குறித்து முனைவர் .ஞானசம்பந்தன் பேசுகின்றனர். நாளை: வெளிநாட்டு படிப்பு குறித்து கல்வி ஆலோசகர் பால்செல்லக்குமார், எந்த படிப்பை தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலை வாய்ப்பு குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, சுகாதார அறிவியல், பாரா மெடிக்கல் படிப்பு குறித்து பேராசிரியர் சிவக்குமார், கம்ப்யூட்டர் அறிவியல் துறையின் தற்போதைய நிலை குறித்து கோவிந்தராஜன் பேசுகின்றனர். நாளை மறுநாள் : தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை குறித்து கணேஷ் மகாதேவன், மீடியா துறையில் பெருகிவரும் பணிவாய்ப்புகள் குறித்து பாலாஜி, வளமான வேலைவாய்ப்பு தரும் பயோடெக் மற்றும் பயோஇன்ஜினியரிங் குறித்து குருமூர்த்தி, கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா, 60 முதல் 80 சதவீத மதிப்பெண் பெறுபவர்களுக்கான வழிகாட்டுதல் குறித்து ரமேஷ்பிரபா, கல்விக் கடன்களை எங்கே பெறலாம் என வங்கி அலுவலர் விருத்தாச்சலம், சம்பளத்தை அள்ளித் தரும் அனிமேஷன் மற்றும் கிராபிக்டிசைனிங் குறித்து நந்தகுமார்பேசுகின்றனர். கல்வி நிறுவனங்களின் ஸ்டால்களில், விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை அனைத்துமே பெறலாம். கேன்டீன் வசதி உண்டு. கருத்தரங்கு தினமும் காலை 10 முதல் 11.30 மணி வரையும், மாலை 4 முதல் 5.30 மணி வரையும், கண்காட்சி காலை 10.30 முதல் மாலை 7 மணி வரையும் நடக்கிறது.அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும், "எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது?" என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்படும். மாணவர்களே... உங்கள்வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து, வளப்படுத்தும் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். பெற்றோர்களும் பங்கேற்கலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்