உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் போலி கல்வி நிலையங்கள்

சட்டத்திற்கு புறம்பாக விசா கொடுத்து பல்வேறு வெளிநாட்டு மாணவர்களை இந்த பல்கலைக்கழகங்கள் சேர்த்துக் கொள்கின்றன. இதில் ஏராளமான இந்திய மாணவர்கள் உள்ளனர். பலரும் அறியாத பல்கலைக்கழகங்கள், ஏராளமான இந்திய மாணவர்களை சட்டத்திற்கு புறம்பான வகையில் விசா கொடுத்து தனது பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்கிறது. மாணவர்களிடம் 3000 டாலருக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் அடைகிறது. இந்த கல்வி நிலையத்தில் சேர்ந்துவிடுவதால், அமெரிக்காவில் சட்டப்படியாக பணியாற்றும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கண்ணை மூடிக் கொண்டு ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் சேர்ந்து விடுகின்றனர். கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படாத கலிபோர்னியா, விர்ஜினியா போன்ற இடங்களில்தான் இதுபோன்ற போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் சரியான கட்டமைப்பு இல்லாமல், வாரத்தில் வெறும் 3 நாட்கள் மட்டுமே வகுப்பு எடுக்கும் நிலையும் உள்ளது. இதனால் மாணவர்களால் முழு நேர வேலைகளில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்பும் ஏற்பட்டு விடுகிறது. அமெரிக்க அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பயன்படுத்தி இந்த பல்கலைக்கழகங்கள் தங்களது சட்ட விரோத காரியங்களை நடத்திக் கொள்கின்றன. தற்போது கலிபோர்னியா சர்வதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹெர்குவான் பல்கலைக்கழகம், நார்தன் விர்ஜினியா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்கள் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும்,  பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது இதையடுத்து, அமெரிக்க செனட் சபை, அமெரிக்காவில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற போலியான பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்