உள்ளூர் செய்திகள்

தொலைதூர கல்வியில் குறைபாடுகள் களையப்படும்

"தொலைதூர கல்வி முறையில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்" என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசினார். சென்னை பல்கலையின் நிர்வாகக் குழு கூட்டம், பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, துணைவேந்தர் திருவாசகம் பதிலளித்து பேசியதாவது: மென்திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு பல்கலை மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இத்திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டியதில்லை. சென்னை பல்கலையின் தொலைதூர கல்வியில் பயில்வோருக்கு பாட புத்தகங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொலைதூர கல்வியில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதுடன், இதிலுள்ள நிர்வாக குறைகளை களையவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்