உள்ளூர் செய்திகள்

இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் வரவேற்பு

சிங்கப்பூரில் இந்திய ஆசிரியர்களின் தேவை அதிகமாக இருப்பதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ஆசிரியர்களின் தேவை இந்திய மொழிகள் மட்டுமல்லாது பிற பாடத்திட்டங்களுக்குமான தேவையும் காரணமாகும் என சிங்கப்பூர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த பெலிண்டா சார்லஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: சிங்கப்பூர் கல்வி நிறுவனம் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட அகாடமி ஆப் புரொபசனல் எக்சலன்ஸ் அமைப்பும் இணைந்து திறமை வாய்ந்த ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்படி கடந்த 2006-ல் எட்டு ஆசிரியர்கள், 2007 முதல் 2009 வரை 30 ஆசிரியர்கள் என சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ஆசிரியர்களின் எண்ணிக்கை 25  என  குறைந்ததுள்ளது. பெரும்பாலான இந்திய ஆசிரியர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்களாவர். சிங்கப்பூரில் பொதுவாக பொருளாதாரம் போன்ற படிப்புகளை சொல்லித் தருவதில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்