குரூப் - 1க்கு இலவச பயிற்சி
சென்னை: தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் - 1 தேர்வுக்கு, 70 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், 16ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பங்களை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரடியாக வந்து பெற்று செல்லலாம். மேலும் விபரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.