உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிலரங்கம்

மதுரை: மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நாடக நடிகை தனிலா 10 நாட்கள் சிறப்பு பயிலரங்கம் நடத்துகிறார். நாடக நடிகையும், இயக்குனருமான தனிலா, லுப்டிபஸ் என்ற நாடகத்தை இந்தியாவில் சில இடங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நாடகம் தொடர்பாக ஒரு மணி நேரம் கருத்தரங்கு, ஒரு மணி நேரம் நாடகம் என தினமும் 3 காட்சிகளை நடத்த உள்ளார். மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள நிகழ் நாடக மையத்தில் இந்த பயிலரங்கு ஜன., 8 ம் தேதி முதல் 13 வரையும், ஜன., 19 முதல் 23 வரையும் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் நடிகர் சண்முகராஜா கூறுகையில், "இந்த பயிலரங்கில் 13 வயதிற்கு மேல் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பயிலரங்கம், காட்சிகள் காலை 9 மணி, பகல் 1.30 மணி, மாலை 5 மணிக்கு நடக்கும். இதில் பள்ளி, கல்லூரியில் இருந்து 50 பேர் குழுவாக பங்கேற்க வேண்டும். மதுரையில் இது ஒரு புதிய முயற்சி என்றார். விபரங்களுக்கு 99440 70671 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்