உள்ளூர் செய்திகள்

கோவையில் தேர்தல் பணிக்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள்

கோவை: சட்டசபை தேர்தல் பணிக்கு, கோவையில் இருந்து, 10 ஆயிரத்து 300 ஆசிரியர்களின் பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் ஆயத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.தேர்தல் ஆணையம், இறுதி வாக்காளர் பட்டியலை, சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், வாக்குச்சாவடி மையங்கள், ஓட்டு எண்ணிக்கை சரிபார்ப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தும் வகையில், பள்ளிகளில் இருந்து பட்டியல் பெறப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இப்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டு மென்ற கோரிக்கை வலுத்துள்ளது.முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், &'&'கோவை மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் இருந்து, 8,500 பேர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, 1,800 பேரின் விபரங்கள், அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் சமர்பிக்கப்பட்டுள்ளன.இதில், ஆசிரியர்களின் முழு விபரங்களும் இருப்பதால், மாவட்ட நிர்வாகமே, தேர்தல் பணிக்கு தகுதியானோர் பட்டியல் தயாரிப்பது வழக்கம். கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், தனியார் பள்ளிகளில் பணிபுரிவோர் விபரங்கள் அளிக்கப்படும். தற்போது வரை, அப்பட்டியல் கேட்கப்படவில்லை,&'&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்