உள்ளூர் செய்திகள்

காலாண்டு தேர்வு வரும் 10ல் துவக்கம்

திருப்பூர்: பிளஸ் 2 காலாண்டு தேர்வு வரும், 10ம் தேதியும்; பத்தாம் வகுப்புக்கு 14ம் தேதியும் துவங்குகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தற்போது, மாதாந்திர தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்ட தேர்வுக்குழு மூலம் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் வழங்கப்பட்டு, தேர்வு நடக்கிறது. கடந்த, 31ம் தேதி துவங்கிய மாதாந்திர தேர்வுகள், வரும், 5ம் தேதி முடிகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு, 10ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு, 14ம் தேதியும் துவங்குகிறது. செப்., 25ம் தேதியுடன், இத்தேர்வு நிறைவடைகிறது. வரும், 26ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு, 3ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறையிடம் இருந்து, அனைத்து மாவட்டங்களுக்கும். காலாண்டு தேர்வு பாட அட்டவணை அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வடிவமைத்து, இத்தேர்வு நடத்தப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்