உள்ளூர் செய்திகள்

எம்.டி., யோகா படிப்பிற்கு 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இந்திய மருத்துவக் கல்லுாரியில், மூன்றாண்டு எம்.டி., படிப்பில், 15 இடங்கள் உள்ளன. இதற்கு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. விண்ணப்பத்தை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, டிச., 17 காலை, 9:30 மணிக்கு நடக்கும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்