புதுச்சேரி பள்ளிகள் ஜுன் 15ல் துவங்கும்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜுன் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஜுன் 1ஆம் தேதி திறப்பதாக இருந்த நிலையில், சமச்சீர் கல்வி முறை நிறுத்தப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், 15 நாட்கள் கழித்து பள்ளியை திறக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த தகவல் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.