மருத்துவம் சார் பட்டப்படிப்பு: 19ம் தேதி முதல் கலந்தாய்வு
நடப்பு கல்வியாண்டில், பி.எஸ்.சி., நர்சிங் - பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளில் சேர, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில், இம்மாதம், 19ம் தேதி துவங்கும் எனவும், அதற்கான கால அட்டவணையையும், மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, காலை, 9:00 மணிக்கு, முன்னாள் படைவீரர், மாற்றுத் திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து, ரேங்க் அடிப்படையில், செப்., 3ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும். விண்ணப்பதாரர்கள், தங்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியலை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.