ராகிங் புகாரில் சிக்கிய 19 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் நீக்கம்
மதுரை: &'&'மதுரை மருத்துவ கல்லுாரியில், 19 பேர் ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆறு மாதம் கல்லுாரியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓராண்டு கல்லுாரி விடுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,&'&' என, மதுரை அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர், மருதுபாண்டியன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் விடுதியில், ராகிங் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் டில்லியில் உள்ள, &'ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு&'விற்கு இ - மெயில் தகவல் அனுப்பினார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, இங்குள்ள ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை நடத்தியதில் முதலாமாண்டு மாணவர்கள், 15 பேரை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள், 19 பேர் ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.விடுதியில் பொருத்தப்பட்டுள்ள, எட்டு, சி.சி.டி.வி., கேமராக்களை ஆராய்ந்தபோது முதலாம் ஆண்டு மாணவர்களின் அறைகளுக்குள், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சென்று வருவது பதிவாகி இருந்தது.&'அறையின் கதவை திறந்தே வைக்க வேண்டும். சீனியர் மாணவர்களை பார்த்தால் சல்யூட் அடிக்க வேண்டும். &'மறு உத்தரவு வரும்வரை, தரையில் உட்கார்ந்து குனிந்தபடி சட்டையின் முதல் பொத்தானை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்&' என, முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்துஉள்ளனர். எனினும், உடல் ரீதியாக எவ்வித துன்புறுத்தலும் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ராகிங் கொடுமை, ஜூலை, 30ல் நடந்துள்ளது. ராகிங் தொடர்பாக, 19 மாணவர்கள் ஆறு மாதம் கல்லுாரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓராண்டு விடுதிக்குள் வரக்கூடாது. இது குறித்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளர், டில்லி ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு, மருத்துவ கல்வி இயக்குனர், பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுதி, கல்லுாரி வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.