உள்ளூர் செய்திகள்

சவீதா பொறியியல் கல்லூரியின் 20-வது பட்டமளிப்பு விழா

சென்னை: சவீதா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) தனது 20-வது பட்டமளிப்பு விழாவை நடத்தியது. இதில் 977 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் சிமாட்ஸ் நிறுவனத்தின் வேந்தர் வீரையன், இயக்குநர் ராஜேஷ், எச்.சி.எல் டெக் நிறுவனத்தின் வளாக உறவுகளின் தலைவர் பிரசாத் மற்றும் சோஹோ கார்ப்பரேஷனின் மனிதவளத் தலைவர் சார்லஸ் கோட்வின் ஆகியோர் விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கினர்.முதல்வர் விஜய சாமுண்டீஸ்வரி ஆண்டு அறிக்கையில் 97 சதவீத வேலைவாய்ப்பு வெற்றிவிகிதம் உள்ளிட்ட சாதனைகளை விளக்கினார். பிரசாத் மற்றும் சார்லஸ் கோட்வின், வாழ்க்கைப் பார்வை, தோல்வியில் கற்றல், ஒப்பீடு இல்லா பயணம் போன்ற கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்தனர். துணை முதல்வர் சென்னில்குமார் உறுதிமொழி நிகழ்வை வழிநடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்