உள்ளூர் செய்திகள்

பேராசிரியை மீதான வழக்கில் ஏப்.26ல் தீர்ப்பு: ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: மாணவியரை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஏப்., 26க்கு கீழமை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலாதேவி மீது மாணவியரை தவறாக வழிநடத்த முயற்சித்தாக 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.பெண் டி.ஐ.ஜி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நிர்வாகி கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, நிர்மலாதேவிக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்புக்காக 26ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விசாகா குழு அமைக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.அப்போது பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது என்பதால் ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, மனுதாரர் தரப்பு தெரிவிக்கும்படி அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்