உள்ளூர் செய்திகள்

ஊரக திறனாய்வு தேர்வு 2,871 மாணவர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது.கிராமப்புற அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை சார்பில் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். ஓ.எம்.ஆர்., தாள்கள் அனைத்தும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் இத்தேர்வில், மாவட்டத்தில் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தமாக 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுதோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையை அரசு செலுத்துகிறது.மாணவர்கள் 12ம் வகுப்பு பயிலும் வரை 4 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் ஊரக திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 2,990 மாணவ, மாணவியர்களில் 2,871 பேர் தேர்வெழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்