உள்ளூர் செய்திகள்

அடுத்த ஆண்டு சந்திரயான் 3 திட்டம்; இஸ்ரோ சிவன் தகவல்

புதுடில்லி: &'&'நிலவை ஆய்வு செய்யும் &'சந்திரயான் - 3&' திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்,&'&' என, இஸ்ரோ தலைவர் சிவன்,தெரிவித்தார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 3 திட்டம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், &'ககன்யான்&' திட்டம் உள்ளிட்டவை, கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டன. கொரோனாவுக்கு முந்தைய நிலை படிப்படியாக திரும்பி வருவதால், விண்வெளி திட்டங்களை துரிதப்படுத்தும் பணிகளில், இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று கூறியதாவது:சந்திரயான் - 3 திட்டம், அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்; அதற்கான பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திட்டமும், சந்திரயான் - 2 திட்டம் போன்றது தான். எனினும், சந்திரயான் - 3 திட்டத்திற்கு, தனியாக விண்கலம் எதுவும் இருக்காது. சந்திரயான் - 2 திட்டத்தின்போது செலுத்தப்பட்ட விண்கலம், இதற்கும் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்