சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகள் மார்ச் 3ம் தேதி துவக்கம்
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இசை பாடத் தேர்வுடன் துவங்கி, மார்ச் 31ம் தேதி அறிவியல் பாடத்துடன் முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மார்ச் 3ம் தேதி துவங்கி மார்ச் 25ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துடன் நிறைவடைகிறது. கலைப் பிரிவு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி பிசினஸ் ஸ்டடீஸ் பாடத்துடன் துவங்கி மார்ச் 29ம் தேதி அக்கவுண்டன்சி பாடத்துடன் நிறைவடைகிறது. ஹுமானிட்டிஸ் பிரிவு மாணவர்களுக்கு மார்ச் 6ம் தேதி பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்துடன் துவங்கி, ஏப்ரல் 7ம் தேதி சோசியாலஜி பாடத்துடன் முடிவடைகிறது.