புதுச்சேரி மருத்துவக் கல்லுாரிகளுக்கு ரூ.30 லட்சம் அபராதம்
சென்னை: சட்டவிரோத நடைமுறையை கையாண்டு, முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்த்ததற்காக, புதுச்சேரியில் உள்ள, ஆறு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த, மருத்துவ கவுன்சில் உத்தரவில் குறுக்கிடவும், உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.புதுச்சேரியில், 2017ல் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.&'சென்டாக்&'&'சென்டாக்&' எனப்படும் மத்திய சேர்க்கை குழு வழங்கிய தகுதி பட்டியலில் இருந்து சேர்க்காமல், விதிமுறைகளை மீறி, மூன்று கல்லுாரிகள் மற்றும் மூன்று நிகர்நிலை பல்கலையில், நேரடியாக மாணவர்களை சேர்த்ததற்காக, மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்க மறுத்தது.மருத்துவ கவுன்சில் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகள், மாணவர்கள், தனித்தனியே வழக்கு தொடுத்தனர். கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்பட்டும், கல்லுாரிகளில் சேர்க்க மறுத்ததை எதிர்த்து, 28 மாணவர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. &'இந்த இடைக்கால உத்தரவை சாதகமாக்கி, உரிமை கோர மாட்டோம்&' என மாணவர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கும்படியும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இறுதி விசாரணைஅதன்படி, உத்தரவாதம் அளித்து, மாணவர்கள் படிப்பை தொடர்ந்தனர். இறுதி தேர்வையும் முடித்து விட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ கவுன்சில் உத்தரவுகளுக்கு, 2018ல் தடை விதிக்கப்பட்டது. இறுதி விசாரணை, 2020ல் தான் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பை முடித்து, தேர்வு எழுதி விட்டனர். இந்த வழக்குக்கு முன்னுரிமை வழங்கி, 2018ம் ஆண்டிலேயே முடித்திருக்க வேண்டும்.கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளை, அந்த கல்வியாண்டிலேயே முடிப்பதை, நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இடைக்கால உத்தரவுகள் வழங்கும்போதும், மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.இந்த வழக்கை பொறுத்தவரை, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்போது, மாணவர்களிடம் இருந்து உத்தரவாத மனுக்கள் பெறப்பட்டதால், அவர்களுக்கு விபரம் தெரியும்.ஆறு கல்வி நிறுவனங்களில் நடந்த மாணவர்கள் சேர்க்கை, சட்டவிரோதமானது. தன்னிச்சையாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறி நடந்த மாணவர்கள் சேர்க்கை செல்லாது.அதனால், மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவு, புதுச்சேரி பல்கலையின் உத்தரவில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை. மூன்று ஆண்டுகளாக படித்து, 65 மாணவர்கள் படிப்பை முடித்துள்ளனர்.சேதாரம் அதிகம்இந்த மாணவர்களும், கல்லுாரிகளும் எடுத்த, &'ரிஸ்க்&'குக்கான விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டும். 2018ல் இந்த வழக்கு முடிக்கப்பட்டிருந்தால், சேதாரம் குறைவாக இருந்திருக்கும். தற்போது, இந்த வழக்கில் முடிவு ஏற்பட்டிருப்பதால், சேதாரம் அதிகம் ஏற்பட்டுள்ளது.மருத்துவ கல்வி போன்ற முக்கிய வழக்குகளில், நீதிமன்றமும் சீரியசாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கை இருந்தால், அதை நீதிமன்றம் சகித்துக் கொள்ளாது.கடுமையாக அணுகும் என்ற தெளிவான செய்தியை, மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சேர்க்க வேண்டும்.அலைக்கழிப்புகவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கப்பட்டும், இடங்கள் இல்லை எனக் கூறி, 24 மாணவர்களை சேர்க்க, கல்லுாரிகள் மறுத்துள்ளன; மாணவர்கள், அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.அரசு உத்தரவு, நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதற்கு பலன் இல்லை. இந்த கல்லுாரிகள் தன்னிச்சையாக இடங்களை நிரப்பிக் கொண்டன.சூழ்நிலையை சாதகமாக்கி, தங்களை வளப்படுத்திக் கொண்ட கல்லுாரிகளை கண்டிக்கிறேன். சட்டவிரோத நடைமுறையை கையாண்டு, மாணவர்களை தன்னிச்சையாக சேர்த்ததால், அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழக்கு செலவு தொகை விதிக்கப்பட வேண்டும். எனவே, அறுபடைவீடு, விநாயகா மிஷன், மஹாத்மா காந்தி, மணக்குள விநாயகர், வெங்கடேஷ்வரா, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்லுாரி, ஆகியவற்றுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் விதிக்கப்படுகிறது.சென்னை, அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு, 10 லட்சம்; ஆழ்வார்பேட்டையில் உள்ள விஷ்ராந்தி அறக்கட்டளைக்கு, 5 லட்சம்; புதுச்சேரி மாநில கொரோனா நிவாரண நிதிக்கு, 15 லட்சம் என, நான்கு வாரங்களில் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.