உயர்கல்வி மாணவர் எண்ணிக்கையை 30% ஆக்க திட்டம்
இதன் மூலம் 2020ம் ஆண்டில் நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் 40 மில்லியன் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முடியும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்தார்.புதுடில்லியில் டிஏவி கல்லூரி விழாவில் பேசிய அவர், 220 மில்லியன் மாணவர்கள் பள்ளிகளில் சேர பதிவு செய்கிறார்கள். அதில் 26 மில்லியன் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி படிப்புகளில் சேருகிறார்கள். அதாவது 194 மில்லியன் மாணவர்கள் பள்ளிப் படிப்பை எட்ட முடியாத நிலையில் உள்ளனர். ஒவ்வொரு மாணவரும் டாக்டராகவோ இன்ஜினியராகவோ ஆக முடியாது. மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தால் பாடங்களில் தோல்வி அடைய மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.மாறி வரும் உலகில் கல்வி முறையும் தேவைக்கேற்ப மாற வேண்டும். தற்போது வகுப்பறைகளில் 90 சதவீத நேரத்தில் ஆசிரியர்களே பேசிக் கொண்டிருக்கிறார்கள். 10 சதவீத நேரம்தான் மாணவர்கள் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. மாணவர்களின் பங்கேற்பு நேரத்தை 90 சதவீதமாக்க வேண்டும் என்றார் அவர்.மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. நுழைவுத் தேர்வு போல தேசிய அளவில் சோதனைத் திட்டத்தை கொண்டு வர அமைச்சகம் உத்தேசித்துள்ளது. இது அட்மிஷனுக்கான மார்க்காக இருக்காது. வகுப்பறைக்கு வெளியே உள்ள பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள இது உதவுவதாக இருக்கும். படிப்பை விருப்ப முடியதாக்கும் முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.