உள்ளூர் செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது 30க்குள் விண்ணப்பம்

சென்னை: தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:திறன் மிக்க ஆசிரியர்கள், தரமான கல்வி வழங்கும் ஆசிரியர்கள் போன்றோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில், ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர் தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெற விரும்பும் பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்லுாரி ஆசிரியர்கள், www.awards.gov.in என்ற இணையத்தில், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்