உள்ளூர் செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்ததாக 300 பள்ளிகள் மீது புகார்

அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து ஏற்கனவே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனினும், கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட, பல பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக தினமும் புகார்கள் வருகின்றன. இதுவரை, 300 பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளன. புகார் கொடுத்த பெற்றோர்களையும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவற்றில், சென்னையில் உள்ள ஆறு தனியார் பள்ளிகள் மீதான புகார்கள் நிரூபணமாகியுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். மேலும், அந்த பள்ளிகளின் நிர்வாகிகள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். முதலில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்ககம் நோட்டீஸ் அனுப்பி, அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு சிங்காரவேலு தெரிவித்தார். பேட்டியின்போது, மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வியும் உடனிருந்தார். இயக்குனர் கூறும்போது, "கட்டணக்குழுத் தலைவர் தெரிவித்தபடி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது இயக்குனரகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்" என்றார். சிங்காரவேலு தெரிவித்த ஆறு தனியார் பள்ளிகளும், மிகவும் பிரபலமான பள்ளிகள். இவை, ராயப்பேட்டை, அண்ணாநகர், வேப்பேரி, கீழ்கட்டளை, கோடம்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கும் இந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, கட்டண நிர்ணயக்குழு தலைவர் கூறியிருப்பது, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆறு பள்ளிகளும், கோர்ட்டுக்குச் செல்ல முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.குழுவின் நடவடிக்கை குறித்து, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் அருமைநாதன் கூறும்போது, "ஆறு பள்ளிகளிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். திடீரென நடவடிக்கை எடுத்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். தண்டனை எதுவாக இருந்தாலும், பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும். மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதை, குழு உறுதி செய்ய வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்