சீடு நுழைவுத் தேர்வு: 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
வடிவமைப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (சீடு) விண்ணப்பிக்க இம்மாதம் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.வடிவமைப்புக்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வுக்கான (சீடு 2024) ஆன்லைன் பதிவு இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பாம்பே நடத்துகிறது. இத்தேர்வுக்கு இம்மாதம் 3ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்துடன் நவ., 1 முதல் நவ., 8 வரை விண்ணப்பிக்கலாம். தேர்விக்கான அட்மிட் கார்டு அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். ஜனவரி 21ம் தேதி சீடு தேர்வு நடைபெறும்.