உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு மையத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப்-4 தேர்வெழுதுவோருக்கான மாதிரி தேர்வு நடந்தது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் ஜூன் 9ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடந்தது. ஏப்ரல் 14ம் தேதி வரை நடந்த இப்பயிற்சியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.வேலை வாய்ப்பு மையத்தில் 6 கட்டங்களாக குரூப்-4 மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மே 17, 21 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 3வது மாதிரி தேர்வு, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இத்தேர்வில் 195 மேற்பட்டோர் பங்கேற்று எழுதினர்.அடுத்து 4, 5, 6வது மாதிரித் தேர்வுகள் முறையே மே 27, 30, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்