சிவில் சர்வீஸ் தேர்வு: 427 பேர் பங்கேற்பு
தேனி: மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தேர்வர்களை தேர்வு செய்யும் தேர்வினை 427 பேர் எழுதினர். ஆனால் 232 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழகத்தில் சிவில் சர்விஸ் தேர்விற்கு தயாராகி வருபவர்களில் ஆயிரம் பேருக்கு ரூ.7500 உதவித்தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. உதவித் தொகை பெறுபவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு மாநிலத்தில் 162 மையங்களில் நடந்தது.தேனி மாவட்டத்தில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி 359 ஆண்கள், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப் பள்ளியில் 300 பெண்கள் என மொத்தம் 659 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தேர்விற்கு ஆண்கள் 228 பேர், பெண்கள் 199 பேர் என 427 பேர் மட்டும் தேர்வு எழுதினர். ஆண்கள் 131 பேர், பெண்கள் 101 பேர் என மொத்தம் 232 பேர் ஆப்சென்ட் ஆகினர்.