தியாகராஜர் பல்கலை அமைக்கக்கோரி, 5 லட்சம் கார்டு அனுப்ப ஏற்பாடு
மதுரை: மதுரையில் தியாகராஜர் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஐந்து லட்சம் தபால் கார்டுகள் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன. மதுரை நகர் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஆர்.சொக்கலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:மதுரையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கல்விப் பணி ஆற்றி, ஒருதுளி கூட நன்கொடை பெறாமல் சேவையில் ஈடுபட்டு வரும் தியாகராஜர் பொறியியல் மற்றும் தியாகராஜர் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த உள்ள மசோதாவை விரைவில் நிறைவேற்றிடக் கோரி ஐந்து லட்சம் தபால் கார்டுகள் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்படும். இப்பல்கலை தொடங்கப்பட்டால், பல ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் உயர்க்கல்வி பெறுவது உறுதி. இவ்வாறு ஆர்.சொக்கலிங்கம் கூறினார்.