உள்ளூர் செய்திகள்

யூனியன் வங்கியில் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு வேலை!

புதிதாகத் தேர்வு செய்யப்படும் 5,000 பணியாளர்களில் 2,500 பேர் அதிகாரிகள் நிலையில் நியமனம் செய்யப்படுவர். தற்போது 2,600 கிளைகளுடன் செயல்படும் யூனியன் வங்கி நடப்பு நிதி ஆண்டுக்குள் 3,000 கிளைகளாக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் நிலையில் சேர்க்கப்படும் 300 பேர், கிளை மேலாளர்கள், புராசசிங் அதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரிகள் போன்ற பணிகளில் நியமிக்கப்படுவர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள்.   சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு செயல்படும் 75 புதிய கிளைகளைத் தொடங்கவும் யூனியன் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக 100 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. புதிய கிளைகளோடு சேர்த்து 175 கிளைகள் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்