பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் காயம்
வெண்மான்கொண்டான்: அரியலுார் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 41 பேருடன் வந்த மினி பஸ்சை, அரியலுார் வாலாஜாநகரத்தை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம், 67, என்பவர் ஓட்டினார்.அந்த வாகனம் வெண்மான்கொண்டான் அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 5 - 9 வயதுடைய பள்ளி குழந்தைகள் ஐந்து பேர் காயம் அடைந்தனர். ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர்.இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.