தேர்வு தாள் திருத்த 56 நீதிபதிகள் நியமனம்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான முதல் கட்ட தேர்வு ஆக., 19ல் நடந்தது. இதற்கு 12,000 பேர் விண்ணப்பித்து, 10,000க்கும் மேற்பட்டோர் எழுதினர்.இதில், 2,544 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வாகினர். நவ., 4, 5 தேதிகளில் சென்னையில் நான்கு முதன்மை தேர்வுகளை எழுதினர். முதன்மை தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நவ., 14 முதல் டிச., 8 வரை சென்னையில் நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 56 மாவட்ட நீதிபதிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.கூடுதலாகவும் 36 நீதிபதிகள் தயாராக உள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தவிர, மற்ற நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். தமிழ்நாடு மாநில ஜுடிசியல் அகாடமி இயக்குனர் சஞ்சய் பாபா, கூடுதல் இயக்குனர் சத்யா மேற்பார்வையில் இப்பணி நடக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., டிச., 11ல் நேர்முக தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது டிச., 8ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால், நேர்முக தேர்வு தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.