உள்ளூர் செய்திகள்

புதிய சமூக நலக்கூடம் ரூ.6 கோடியில் பணி தீவிரம்

ஆழ்வார்பேட்டை: ஆழ்வார்பேட்டையில் 6 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதி மற்றும் வடிவமைப்பில் புதிய சமூக நலக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.தேனாம்பேட்டை மண்டலம் 123வது வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமூக நலக்கூடம் இருந்தது. இந்தாண்டு துவக்கத்தில் அந்த சமூக நலக்கூடம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து தென் சென்னை தொகுதி எம்.பி., நிதியுதவி மற்றும் சிங்கார சென்னை திட்டம் ஆகியவற்றின் கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமூக நலக்கூடம் அமைக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கின. இந்த புதிய சமூக நலக்கூடத்தில், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி தரைதளத்தில் அமைக்கப்பட உள்ளது.இந்த பார்க்கிங் வளாகமும் நல்ல இட வசதியுடன் ஏற்படுத்தப்பட உள்ளது. முதல் தளத்தில் சமையல் மற்றும் உணவு பரிமாறும் வளாகம் அமைக்கப்படுகிறது. இரண்டாம் தளத்தில், திருமண அரங்கு அமைக்கப்பட உள்ளது. இங்கு போதிய அளவில், மின்துாக்கி வசதியும் உருவாக உள்ளது. அதேபோல, நவீன கழிப்பறை வசதியும் அமைக்கப்பட உள்ளது. இதுபோன்ற பல்வேறு வசதிகளுடன், நவீன வடிவமைப்பில் சமூக நலக்கூடம் அமைப்பதற்கான, 15 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் எட்டு மாதங்களுக்குள், இந்த சமூக நலக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்