உள்ளூர் செய்திகள்

அழகப்பா கல்லுாரியில் ஜூன் 6ல் கலந்தாய்வு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் முதலாமாண்டு இளநிலை மாணவர்கள் தேர்வுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூன் 6ம் தேதி நடைபெறுகிறது.கல்லுாரியில் உமையாள் அரங்கத்தில் நடைபெறும் கலந்தாய்வு காலை 09:30 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 6ல் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் பாதுகாப்பு படை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.ஜூன் 8, தொடங்கி ஜூன் 18 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ மாணவிகள் உரிய சான்றிதழ் மற்றும் அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.agacollege.in என்ற இணையதளத்தையோ அல்லது கல்லுாரியை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்