இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 % ஆக இருக்கும்: ஐ.நா., கணிப்பு
புதுடில்லி: 2024 ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என ஐ.நா., கணித்து உள்ளது. முன்பு 6.2 சதவீதம் ஆக இருக்கும் என கணித்து இருந்தது.இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024ம் ஆண்டில் 6.9 சதவீதம் ஆகவும், 2025 ல் 6.6 சதவீதம் ஆகவும் இருக்கும். வலுவான முதலீடு மற்றும் துடிப்பான தனியார் நுகர்வு ஆகியவையே இதற்கு காரணமாக இருக்கும். சரக்கு ஏற்றுமதி வளர்ச்சி அடைவதுடன், மருந்து, ரசாயனங்கள் ஏற்றுமதியும் விரிவடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.