உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை: ஜுலை 7ல் இளநிலை தேர்வு முடிவு

www.unom.ac.in என்ற இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 2008-09ம் கல்வியாண்டு முதல் இளநிலை படிப்பில் சேர்ந்த மாணவர்கள், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பாடம் ஒன்றுக்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். ஜுலை 21ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை சென்னை பல்கலைக் கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இறுதியாண்டுத் தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும தோல்வி அடைந்தவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.250.  இதற்கு விண்ணப்பிக்க ஜுலை 15ம் தேதி கடைசி நாளாகும். உடனடித் தேர்வு சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஜுலை 23ம் தேதி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்