புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 8ம் தேதியில் இருந்து வகுப்புகள் துவக்கம்
புதுச்சேரி: &'பள்ளிகள் திறக்கப்பட்டு, வரும் 8ம் தேதியில் இருந்து வகுப்புகள் நடத்தப்படும்; வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்&' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு தெரிவித்தார்.அவர் நேற்று அளித்த பேட்டி:புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வரும், கல்வி அமைச்சரும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 5ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.வரும் 5, 6, 7 ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளிகளில் சுத்தம் செய்வது, கிருமி நாசினி தெளிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.வரும் 8ம் தேதியில் இருந்து வகுப்புகள் நடத்தப்படும். முதல்கட்டமாக, 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும், வழிகாட்டுதலுக்காகவும் மாணவர்கள் வரலாம்.6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் ஏற்கனவே வாரத்தில் 5 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டன. தற்போது, சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு 3 நாட்களும், 9, பிளஸ் 1 மாணவர்களுக்கு 3 நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும்.திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9ம் வகுப்பும், பிளஸ் 1 வகுப்பும் நடத்தப்படும். செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10ம் வகுப்பும், பிளஸ் 2 வகுப்பும் நடத்தப்படும்.காலை 10:00 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். மதிய உணவு வழங்குவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.பஸ்கள் இயக்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும். வருகைப் பதிவேடுகிடையாதுதுாரமான இடங்களில் இருந்து வரும் மாணவர்கள், ஏற்கனவே அவர்கள் படித்த பள்ளிக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பள்ளிக்கும் செல்லலாம். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வருகைப் பதிவேடு எடுக்கப்படாது.பெற்றோர்கள் ஒப்புதல் தந்த பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்காக சிறு விண்ணப்பம் வழங்கப்படும்.மாணவர் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர் களுக்கு கொரோனா தொற்று இருந்தாலோ, சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாலோ பள்ளிக்கு அனுப்பக்கூடாது.உடனடியாக மருத்துமனையை அணுக வேண்டும். அதுபோல, ஆசிரியருக்கோ அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கோ கொரோனா தொற்று இருந்தாலோ, அறிகுறிகள் இருந்தாலோ விடுப்பில் செல்ல வேண்டும். பள்ளிக்கு வரக் கூடாது. முகக் கவசம் வழங்கப்படுமா? தெர்மல் அனலைசர் மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்வது போன்றவை நடைமுறைப் படுத்தப்படும். பள்ளிகளில் கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.காலையில் பள்ளிகளில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக பள்ளிகளின் முதல்வர்களை அழைத்து பேச உள்ளோம். மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் முகக் கவசம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.தனியார் பள்ளிகள் நாள் முழுவதும் வகுப்புகளை நடத்தக் கூடாது. காலை 10:00 மணியில் இருந்து, மதியம் 1:00 மணி வரை மட்டுமே அனுமதி. தனியார் பள்ளிகளை அதிகாரிகள் தினசரி பார்வையிடுவார்கள். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்து பிளஸ் 2 வகுப்பு வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர். இவ்வாறு, இயக்குனர் கூறினார். இணை இயக்குனர் மைக்கேல் பெனோ உடனிருந்தார்.