உள்ளூர் செய்திகள்

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கதி: 8 வார கெடு

இது குறித்து, பேராசிரியர் பி.என்.டான்டன் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு செய்து, சென்ற மாதம் மத்திய மனிதவளத்துறை அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக் கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க கோரி, வக்கீல் விப்லாவ் சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள், தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பெஞ்ச், நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கதாதற்கான காரணம் என்ன என்று கேட்டனர்.இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் கூறியதாவது:இந்த நிலையில், யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. டான்டன் குழுவின் அறிக்கையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் செயல்பாடு குறித்து சில குறைகள் தெரிவிக்கப் பட் டுள்ளன. எனவே, இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னும், இந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் அபிப்ராயத்தை அறிய விரும்பினோம். இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.இதை தொடர்ந்து, நீதிபதிகள் பெஞ்ச் கூறுகையில்,மற்ற நாடுகளில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் குறித்து அரசு ஆய்வு செய்து, நம் நாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தேவை குறித்து முடிவு செய்ய வேண்டும். எனினும், பி.என்.டான்டன் தலைமையிலான நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்னும் எட்டு வாரங்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்