உள்ளூர் செய்திகள்

குடற்புழு நீக்க 85 சதவீதம் பேருக்கு மாத்திரை குடுத்தாச்சு

கோவை: கோவையில் பொது சுகாதாரத்துறையின் கீழ், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு நேற்று முன்தினம், 10 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளன.குடற்புழு நீக்க நாள், ஆண்டுக்கு இரு முறை செயல்படுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, இம்மாத்திரை வழங்கப்படுகிறது.கோவையில் நேற்று முன்தினம் பள்ளி, கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார நிலையங்களில் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 9.56 லட்சம் பேருக்கும், 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட, 2.56 லட்சம் உட்பட, 12 லட்சத்து 12 ஆயிரத்து 944 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், கோவையில் நேற்று, 85 சதவீதம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 15 சதவீதம் பேருக்கு, வரும் 17ம் தேதி வழங்கவுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்